Home /News /tamil-nadu /

மனைவி மீது சந்தேகம், கற்பை நிரூபிக்க மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன கணவன்... 13 வயது சிறுமி பரிதாப பலி

மனைவி மீது சந்தேகம், கற்பை நிரூபிக்க மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன கணவன்... 13 வயது சிறுமி பரிதாப பலி

கற்பை நிரூபிக்க மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன கணவன்

கற்பை நிரூபிக்க மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன கணவன்

திருவொற்றியூரில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 41 இவர் ஐஓசியில்  டேங்கர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவருக்கும் ஜெயலட்சுமி வயது 38 என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி பவித்ரா(13) என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்  மனைவியின் மீது சந்தேகம் கொண்டதால் அவர்களுக்குள் பல நேரங்களில்  சண்டை ஏற்பட்டுள்ளது. தனது குழந்தையை  காப்பாற்றவே தான்  திருமணம் செய்ததாக பலமுறை அவரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் பத்மநாபன் இதை நம்ப தயாராக இல்லை. அடிக்கடி பத்மநாபன் ஜெயலட்சுமி உடம்பில் வித்தியாசமான வாசனை வருகிறது, நீ எங்கு சென்று வருகிறாய் என சந்தேகப்படும்படி பல கேள்விகள் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. இதனிடையே  நேற்று இரவு பன்னிரண்டரை மணி அளவில் ஜெயலட்சுமியிடம் நீ கற்புக்கரசியாக இருந்தாள் பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி  கொளுத்து, நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது என  சொல்லியுள்ளார்.

சண்டை முற்றிய நிலையில்  விரக்தியில் பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயலஷ்மி கொளுத்தி உள்ளார். பவித்ராவின் உடம்பில் தீ பற்றவே கதறி அழுது உள்ளார். அவளை காப்பாற்ற இரண்டு பேரும் போர்வை போட்டு அணைக்க முயற்சியும் செய்துள்ளனர். பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆய்வாளர் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 78% தீக்காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சை பெற்று வந்தார். பவித்ராவிடம் மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் வாக்குமூலம் பெற்றுள்ளார்.  இது தொடர்பாக திருவொற்றியூர் ஆய்வாளர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட பவித்ராவின் பெற்றோர்கள் பத்மநாபனை முதல் குற்றவாளியாகவும் ஜெயலக்ஷ்மியை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து கைது  செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்
Published by:Vijay R
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி