விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி: சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் கைது

விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி: சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் கைது

கோப்புப் படம்

கன்னியாகுமரியில் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் அலுவலகத்திற்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான சதீஷ். மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிள்ளைதோப்பு அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஜோஷி என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு ஜோஷி கணவரிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஜோஷியுடன் பிரச்னை செய்து வந்துள்ளார்.

    Also read: தந்தையை கொன்றவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்..

    திங்கட்கிழமை நண்பகல் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் ஜோஷி வேலைபார்த்து வந்த தனியார் நிறுவனத்திற்கு சதீஷ் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.



    ரத்த வெள்ளத்தில் ஜோசி சுருண்டு விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சதீஷை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சதீஷை கைது செய்த வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேர்ந்து வாழ மறுத்து விவாகரத்து கேட்ட மனைவியை கணவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் குமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Rizwan
    First published: