தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கரடிகுளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துபாண்டி(38). இவரது மனைவி இசைசெல்வி(23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இசைசெல்விக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இசைசெல்விக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்த முத்துப்பாண்டி தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பகோரி கரடிகுளத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவர்
தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முத்துப்பாண்டி கீழே இறக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்