4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துசென்று, சேர்ந்துவாழ வராததால் மனைவியை வெட்டிய நபர் கைது.. ( வீடியோ)

திருப்பத்தூர் மாவட்டத்தில், கால் சென்டரில் பணிபுரிந்த மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு போலீசாரிடம் சரணடைந்துள்ளார் கணவன். 4 ஆண்டுகளாக தன்னுடன் சேர்ந்து வாழ வராததால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மருத்துவமனையில் மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். நடந்தது என்ன?

  • Share this:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் மூலம் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார். அதில் வளத்தூர் பகுதியை சேர்ந்த 29 வயதான மஞ்சு ரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர், காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த 38 வயதான தினேஷ். 7 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கணவனை விட்டு 4 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மஞ்சு ரேகா, குழந்தைகளுடன் தாய் வீ்ட்டில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கால் சென்டருக்கு சென்ற கணவன் தினேஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மஞ்சுரேகாவின் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடி விட்டார். அலுவலகத்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மஞ்சுரேகாவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படிக்க...ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்..


இதற்கிடையே, மனைவியை சரமாரியாக வெட்டிய தினேஷ் பாகாயம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ அழைத்தும் மனைவி வராததால், அவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு சரமாரியாக வெட்டியதாக தினேஷ் கூறியுள்ளார்.

படிக்க... இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72.70 லட்சமாக உயர்வு..

இதையடுத்து தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மஞ்சுரேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கால்சென்டரில் பணிபுரியும் மனைவியை கணவனே பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading