பிரசவத்திற்காக சென்ற மனைவி கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற கொடூரம்.. 8 மாதம் கழித்து அம்பலம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று எரித்துவிட்டு காணவில்லை என மனைவி அவரின் கள்ளக்காதலர் நாடகமாடிய சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 3, 2020, 11:27 PM IST
  • Share this:
உளுந்தூர்பேட்டை அருகே 8 மாதங்களாக காணவில்லை என தேடப்பட்டவர் மனைவியின் கள்ளக்காதலரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

பாலமுருகன் மனைவியை கிராமத்திலேயே தங்க வைத்துவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு அவ்வப்போது ஊருக்கு வருவது வழக்கம்.


8 மாதங்களுக்கு முன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில மணிமேகலைக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்ததும், தன்னைப்போல் இல்லை எனவும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்போல் இருப்பதாககூறி தகராறில் ஈடுபட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு பாலமுருகன் ஊர் பக்கம் வரவில்லை.

இரண்டு, மூன்று மாதங்களாக பாலமுருகனை நேரில் பார்க்க முடியாமலும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்ததால் சகோதரி கணவர் கோவிந்தராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மைத்துனரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் கோவிந்த்ராஜ் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் மனைவி மணிமேகலையிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பாலமுருகன் குறித்து எந்த துப்பு கிடைக்காததால் கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.அப்போது, மணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியவரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தனர். விசாரணையில் அதிர்ச்சிகர தகவலைக் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை பார்த்து மணிகண்டன் உடனான கள்ளக்காதலை உறுதி செய்த பாலமுருகன் சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து பாலமுருகன் புறப்பட்டதும், மணிகண்டனுக்கு மணிமேகலை போன் செய்துள்ளார்.

கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்துவிட்டதாகவும், இதற்கு மேல் விட்டால் ஆபத்து எனக்கூறியுள்ளார். இதை அடுத்து பேருந்தில் இறங்கி வீட்டுக்குச் சென்ற பாலமுருகனை பின்தொடர்ந்து மணிகண்டன் சென்றுள்ளார். வீட்டுக்குள் பாலமுருகன் நுழைந்ததும், அவரின் பின்னால் இருந்து சுவரின் மீது தள்ளி தாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பித்தளை குடத்தாலும், சுத்தியாலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக. உயிரிழந்தார்.

பாலமுருகன் இறந்ததை உறுதிப் படுத்தி கொண்ட மணிகண்டன் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சகோதரர் தனசேகரிடம் நடந்தை கூறி அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று சடலத்தை சாக்கு பையில் கட்டி அதிகாலையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரே பாலமுருகன் உடலை எரித்து, எலும்புகளை பெரிய கற்களை கொண்டு நொறுக்கி சாம்பலை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மணிகண்டன் அவரது சகோதரர் தனசேகர், பாலமுருகன் மனைவி மணிமேகலை ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று எரித்துவிட்டு காணவில்லை என மனைவி அவரின் கள்ளக்காதலர் நாடகமாடிய சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading