சென்னையில் வேறொருவருடன் தொடர்பிலிருந்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் போலீஸில் சரண்... பிள்ளைகள் தவிப்பு..

கோப்புப் படம்

சென்னையில், மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், பட்டப்பகலில் அவரது கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

 • Share this:
  சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை மேட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் 40 வயதான ஹரி என்ற நீலஹரி - 35 வயதான கோமதி தம்பதி. இவர்களுக்கு 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். ஹரி எலக்ட்ரிசியனாகவும், கோமதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் தற்காலிக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தனர்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், நீலாங்கரை காவல் நிலையத்திற்கு ரத்தக் கறைகளோடு வந்த ஹரி தனது மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டதாகக் கூறினார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவருடன் வீட்டிற்கு சென்று பாரத்த்போது கோமதியின் சடலம் கிடந்தது; சடலத்தை அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பி வைத்தனர்.

  ஹரியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகமான தகவல்கள் தெரியவந்தன. கடந்த 2005ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் சின்ன நீலாங்கரையில் வசித்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் கோமதிக்கு சென்னை மாநகராட்சியில் உமேஷ் என்பவர் தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்தார்.

  உமேஷுடன் கோமதி அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார், அதைக் கணவர் ஹரி கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் கள்ளக் காதலில் இருந்ததை தான் பார்த்ததாகவும் ஹரி போலீசாரிடம் கூறியுள்ளார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறின்போது, வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து ஹரி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரியைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

  Also read: திரைத்துறையில் சம்பாதிக்க முடியாததால் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளனர் - பெ.மணியரசன் விமர்சனம்

  மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் சிறை சென்ற நிலையில் மகன், மகள் இருவரும் பெற்றோர் இல்லாமல் உறவினர் வீட்டில் அடைக்கலம் தேடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கணவனே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நீலாங்கரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: