சிறுமி மீது கொண்ட ஆசையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..

Youtube Video

மகளாக பார்க்க வேண்டிய சிறுமி மீது ஆசை கொண்டு, மனைவியை கொன்ற கொடூரன் வாழ்வியல் முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குருர புத்தி கொண்ட சைக்கோவாக மாறியது எப்படி?

  • Share this:


    கன்னியாகுமரி மாவட்டத்தில் நெஞ்சுவலி காரணமாக பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக பெண்ணின் முப்பதாவது நாள் இறங்கல் நிகழ்வில் பெண்ணை கணவனே அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. மனைவியின் சகோதரி மகள் மீது கொண்ட மோகத்தால் மனைவியை கொன்ற கொடூரன் சிக்கிது எப்படி?

    கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான பனிப்பிச்சை 32 வயதான மேகலா தம்பதி. 2012 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த தம்பதிக்கு, 7 வயதில் மகனும் 5-வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி இரவு, மேகலா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பனிப்பிச்சை உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். அடுத்த நாள் காலையிலையே உறவினர்கள் வருவதற்கு முன்பாகவே மேகலா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேகலா இறப்பு பற்றி விசாரித்த அனைவரிடமும் , பனிப்பிச்சை யதார்த்தமாக மனைவி இறந்ததை சோகமாக விவரித்துள்ளார். மேகலா இறந்த 30-வது நாளான டிசம்பர் 21-ம் தேதி முட்டம் தேவாலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது.

    தேவாலயத்தில் சோகமாக இருந்த பனிப்பிச்சை தனது மகனிடம் கடிதம் ஒன்றை கொடுத்து, தனது மனைவியின் சகோதரி மகளான 16 வயது சிறுமியிடம் கொடுக்க சொல்லியுள்ளார். நான்குப் பக்க அந்த கடிதத்தை பெற்ற சிறுமியோ அதை படித்து அதிர்ந்து போய் தனது தாயாரிடம் கொடுத்துள்ளார்.

    அந்த கடிதத்தில் பனிப்பிச்சை அந்த சிறுமியை காதலிப்பதாகவும் , சிறுமையை அடையவே மனைவி மேகலாவை அடித்து கொலை செய்ததாகவும் எழுதி இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பனிப்பிச்சையை பிடித்த உறவினர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்து, குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் உடனடியாக தனிப்படை அமைத்து போலீசார் மேகலாவின் இறப்பு தொடர்பாக விசாரணையை தொடங்கினர்.

    தாசிந்தார் முன்னிலையில் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ கூராய்வும் தடயவியல் சோதனையும் செய்யப்பட்டது. பனிப்பிச்சையிடம் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்றதற்கான அதிர்சியுட்டும் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார்.

    மனைவியின் உடன் பிறந்த சகோதரியின் 16-வயதான மகள் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக சித்தி மேகலா வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது சிற்றப்பாவான பனிப்பிச்சை சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதை பார்த்த மேகலா கண்டித்துள்ளார். அதனால் தனது ஆசைக்கு இடையூறாக இருந்த மனைவி மேகலாவை நவம்பர் 11-ம் தேதி இரவு அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் பனிப்பிச்சை.

    மேலும் படிக்க... தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர்..

    இதனையடுத்து பனிப்பிச்சை சிறுமிக்கு எழுதிய 4-ன்கு பக்க கடிதத்தையும் அவரது வாக்குமூலத்தையும் ஆதாரமாக வைத்து கொலை வழக்கு பதிவு செய்தனர் போலீசார். மனைவியை கொன்ற வழக்கில் பனிப்பிச்சையை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறையில்அடைத்தனர்.

    சிறுமி மீது கொண்ட குருர ஆசையால் மனைவியை கொன்று நாடகமாடிய குற்றவாளி கைது செய்யப்பட்டது அப்பகுதயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: