நடத்தையில் சந்தேகம் - மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

சென்னை தாம்பரத்தில் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம் - மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
மாதிரி படம்
  • Share this:
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தனியாருக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 1000-க்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஜெகநாதன்(75) அவருடைய மனைவி சுலோச்சனா(62) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அதில், ஜெகநாதன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகம் அடைந்து அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஜெகநாதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரின் மனைவி சுலோச்சனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் ஜெகநாதன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கேபிள் ஒயர் எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஜெகநாதன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்ளே அவரின் மனைவி கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து பீர்க்கன்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading