சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர் உறவுக்கு அழைத்ததால், கொலை செய்த மனைவி

கொலைசெய்த மனைவி

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூரில் என்எல்சி ஊழியரை மனைவியே அடித்துக்கொன்று எரிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த செம்பகுறிச்சி வனப்பகுதியில்  கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து அவ்வழியாகச் சென்ற லாரி ஓட்டுனர் ஒருவர் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காரில் முன்பக்க டயர் எரிந்து கொண்டிருப்பதை கண்டு, தீயை அணைத்து பின்பு காரில் சோதனையிட்டனர்.

அப்போது காரின் பின் இருக்கையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இருப்பதை கண்டுள்ளனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் என்.எல்.சி ஊழியர் பழனிவேல் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பழனிவேலின் மனைவி மஞ்சுளாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.

அப்போது அவர் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக மஞ்சுளா பதிலளித்துள்ளார். அதனை தொடர்ந்து மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பழனிவேல்- மஞ்சுளா தம்பதிக்கு 3 பிள்ளைகள். முதல் பெண் மின் வாரியத்தில் உதவி பொறியாளராக உள்ளார். 2-வது பெண் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.    3-வது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பழனிவேல் சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மஞ்சுளா பல ஆண்டுகளாக தாம்பத்ய உறவுக்கு மறுத்து வந்துள்ளார்.

மஞ்சுளாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் பழனிவேல் அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மாத சம்பளத்துடன், வட்டித் தொழில் மூலமும் பணம் சம்பாதித்தும், குடும்ப செலவுக்கோ, மனைவிக்கோ பணம் தராமல் இருந்துள்ளார் பழனிவேல். இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது பிரச்னையை அவரது தம்பி ராமநாதனிடம் கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து பழனிவேலுவை கொலை செய்துவிட்டு அவர் பெயரில் உள்ள சொத்துக்களை எடுத்துக்கொள்ள திட்டம் தீட்டியுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பழனிவேலை அவரது மனைவி மஞ்சுளா, ராமநாதன் மற்றும் ராமநாதனின் நண்பர் இருவருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், சாக்கு பையில் கட்டி, போர்வையில் போர்த்தி உடலை காரில் எடுத்துச் சென்று சின்னசேலம் அருகிலுள்ள வனப்பகுதியில் எரிக்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து மஞ்சுளாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமநாதன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடிவருகின்றனர்.

Also watch: கன்னிப் பேச்சில் கவனம் ஈர்த்த தமிழச்சி தங்கபாண்டியன். 

Published by:Anand Kumar
First published: