கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி... கிருஷ்ணகிரியில் கொடூரம்

தனது தந்தை கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஈஸ்வரனின் முதல் மனைவியின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 9:12 PM IST
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி... கிருஷ்ணகிரியில் கொடூரம்
தனது தந்தை கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஈஸ்வரனின் முதல் மனைவியின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 9:12 PM IST
கிருஷ்ணகிரி அருகே கணவரை கல்லால் அடித்து  கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஜி.துர்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவர் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் விஜயம்மா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் ஈஸ்வரன்.

விஜயம்மா-ஈஸ்வரன் தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், இருவரும் பி.ஜி. துர்கம் பகுதியிலேயே வசித்து வந்தனர்.


மது அருந்தும் பழக்கம் உள்ள ஈஸ்வரன் அடிக்கடி போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

பணப்புழக்கம் அதிகம் உள்ள ஈஸ்வரனிடம், தொழில் தொடங்குவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சத்தியமூர்த்தி ரூ. 5 லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில், கொடுத்த பணத்திற்கு வட்டி வாங்குவதற்காக சத்தியமூர்த்தியை அடிக்கடி சந்தித்துள்ளார் விஜயம்மா. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

Loading...

இருவரும் அடிக்கடி தனிமையில் நெருக்கமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சத்தியமூர்த்தி உடனான தொடர்பு பற்றி ஈஸ்வரனுக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவரிடம் கொடுத்த ரூ. 5 லட்சம் பணத்தை திருப்பிக் தரக்கேட்டுள்ளார். மேலும், தனது மனைவியை மதுபோதையில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

ஈஸ்வரனின் கொடுமையிலிருந்து தப்பிக்க நினைத்த விஜயம்மா, தனது கள்ளக்காதலன் சத்தியமூர்த்தியுடன் சேர்ந்து, ஈஸ்வரனை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

பின்னர், கடந்த 20-ம் தேதி பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி ஈஸ்வரனை சத்தியமூர்த்தி அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஈஸ்வரனுக்கு போதை தலைக்கேறியதும் சத்திய மூர்த்தி ஈஸ்வரனை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். அவருக்கு உதவியாக விஜயம்மாவும் இருந்துள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க ஈஸ்வரனின் முகத்தை சிதைத்த சத்தியமூர்த்தி, ஒரு தார்ப்பாயில் வைத்து உடலை கட்டியுள்ளார்.

பின்னர், லோடு ஆட்டோவில் எடுத்துச் சென்று ஆந்திர மாநிலம் குடுப்பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். பின்னர் ஈஸ்வரனை காணவில்லை என கிராமத்தினருடன் சேர்ந்து விஜயம்மாளும் சூளகிரி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே அடையாளம் தெரியாத உடலை மீட்ட ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டிருப்பது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சூளகிரி போலீசார் உதவியுடன் ஆந்திர போலீசார் விசாரணையை தொடங்கினர். முதலில் விஜயம்மாளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், ஈஸ்வரனை சத்திய மூர்த்தி உடன் சேர்ந்து கொலை செய்ததை விஜயம்மாள் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது தந்தை கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஈஸ்வரனின் முதல் மனைவியின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை அடுத்து இருவரையும் கைது செய்த ஆந்திர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Watch: ஜெயலலிதாவை மனதில் வைத்து பெண்ணாக நடித்தேன் - நடிகர் ஆனந்தராஜ்

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...