காதல் மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன் - திருமணமான 2 மாதங்களில் நேர்ந்த கொடுமை

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணமான 2 மாதங்களில் வரதட்சனை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன் - திருமணமான 2 மாதங்களில் நேர்ந்த கொடுமை
மாதிரி படம்
  • Share this:
வானூர் பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த ஜீவாவும் நைனார்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரியும் காதலித்து கடந்த ஜூன் 3ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி ராஜேஷ்வரியிடம் ஜீவா வரதட்சனை கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜேஷ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

ALSO READ :  கணவரை கொன்று சடலத்தை வாஷிங் மெஷினில் கழுவி உப்பு போட்டு ப்ரிட்ஜில் வைத்த மனைவி - துன்புறுத்தலால் ஆத்திரம்


பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் ஜீவா தம்மை கொளுத்தியதாகவும், உண்மையை வெளியே சொன்னால் ராஜேஸ்வரியின் தந்தை, சகோதரனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வானூர் போலீசார் ஜீவாவை கைது செய்துள்ளனர்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading