• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சியில் மனைவி சாப்பாடு போடாததால் போதையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

பொள்ளாச்சியில் மனைவி சாப்பாடு போடாததால் போதையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

மாதிரி படம்

மாதிரி படம்

சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொள்ளாச்சி அருகே குடிபோதையில் வந்ததால் மனைவி சாப்பாடு போடவில்லை என்று மனமுடைந்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளியான இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கூலித்தொழிலாளியான பிரகாஷ் தினமும் குடிபோதையில் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது மனைவி ரஞ்தாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பார்க்க... தமிழகத்தை தாக்கும் ஃபனி புயல்! தற்போதைய நிலவரம்

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல குடிபோதையில் பிரகாஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி ரஞ்சிதாவிடம் பசிக்கிறது சாப்பாடு போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ரஞ்சிதா கோபித்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also see... ரயிலில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மின்சாரம் தாக்கி கருகிய பரிதாபம்

Also see... இலங்கைத் தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள்

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: