காதல் மனைவியை விட்டுவிட்டு திருநங்கையுடன் குடித்தனம்: டிக் டாக் வீடியோவால் சிக்கிய கணவர்

மனைவி 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற கணவர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு ஓசூரில் குடித்தனம் செய்து வந்தது விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: July 2, 2019, 12:37 PM IST
காதல் மனைவியை விட்டுவிட்டு திருநங்கையுடன் குடித்தனம்: டிக் டாக் வீடியோவால் சிக்கிய கணவர்
திருநங்கையுடன் சுரேஷ்
Web Desk | news18
Updated: July 2, 2019, 12:37 PM IST
விழுப்புரம் அருகே மனைவி குழந்தைகளை விட்டு சென்ற ஒருவர் திருநங்கையுடன் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கினார்.

விழுப்புரம் அடுத்து வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2013-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. கணவரை பல இடங்களில் தேடிய சுரேஷின் மனைவி ஜெயபிரதா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சுரேஷை விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் தேடி வந்ததுள்ளனர். இந்நிலையில், டிக் டாக் வலைதளத்தில் காணாமல் போன சுரேஷ் போன்ற நபர் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டு இருப்பதை ஜெயப்பிரதாவின் உறவினர்கள் பார்த்துவிட்டு, ஜெயப்பிரதாவிடம் வீடியோவைக் காட்டியுள்ளனர்.

திருநங்கையுடன் சுரேஷ்


அந்த வீடியோவை பார்த்தவர், டிக்கெட்டில் இருப்பது கணவர் சுரேஷ்தான் என்று கூறினார். உடனே இந்த தகவலை தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் ஜெயபிரதாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்ததில், வீடியோவில் இருப்பவர் ஓசூரில் இருக்கும் திருநங்கை என்று கண்டறிந்தனர். அதன் பிறகு ஓசூருக்கு நேரில் சென்று  விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்ததை வந்ததை தெரிந்துக்கொண்டனர்.

சுரேஷை திருமணம் செய்துக் கொண்ட திருநங்கை


இதனையடுத்து அங்கு இருந்து சுரேஷை மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.  தொடர்ந்து சுரேசிடம் விசாரணை செய்ததில் தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

மனைவி, இரண்டு பெண் குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்றவர் திருநங்கையைத் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வாழ்ந்து வந்தது விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க.... வியாபாரம் ஆகாமல் தவிக்கிறதா நேர்கொண்ட பார்வை!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...