துணி உலர்த்துவதில் தகராறு.. கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் துவைத்த துணிகளை உலரவைக்க தாமதம் செய்ததால் கணவன் ,மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்துள்ளார். மனைவியின் மரணத்திற்கு கணவன் தாக்கியது தான் காரணமா?நடந்தது என்ன?

 • Share this:
  ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் வீட்டிலும் ராணுவ கட்டுப்பாட்டை எதிர்பார்த்த அசோகன், தனது பேச்சை கேட்காத மனைவியை தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். ராணுவ கட்டுப்பாடு வீட்டில் எல்லை மீறியது எப்படி?

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் 58 வயதான அசோகன். இவரது மனைவி 49 வயதான ஜெயந்தி. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 24 வயதான சஞ்சீவினி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். மற்ற இருபெண்களும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

  ராணுவத்தில் இருந்து அசோகன் ஓய்வுபெற்றிருந்தாலும், வீட்டில் ராணுவ ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்லி குடும்பத்தினரை வலியுறுத்துவது வழக்கம். இதனால் அவ்வப்போது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  ஞாயிற்று கிழமை வீட்டில் துணியை துவைத்த ஜெயந்தி, துவைத்த துணியை உலர்த்தாமல் பக்கெட் ஒன்றில் எடுத்து வைத்துவிட்டு, வேறு பணிகளை செய்துள்ளார். அதை கவனித்த அசோகன் ஏன் துணியை உலர்த்தவில்லை என்று மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அசோகன் மனைவி ஜெயந்தியை முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார்.

  கணவன் தாக்கியதால் ஜெயந்தி நீண்டநேரம் அழுதுள்ளார், அதனால் ஏற்கனவே ஆஸ்த்துமா நோயாளியான அவருக்கு திடீரென மூச்சுதிணரல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த ஜெயந்தியை மீட்ட மகள்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இந்நிலையில், தனது தாய், தந்தை அசோகன் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என்று மூத்தமகள் சஞ்சீவினி கொடுத்த புகாரின் அடிப்படையில், அசோகன் மீது கொலைவழக்குப் பதிவு செய்த நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் துணி உலரவைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியை உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க...TTV DHINAKARAN | பதவி பெருசல்ல கொள்கைதான் பெருசு

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: