தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கால் ஹோட்டல்களை விற்கும் உரிமையாளர்கள்

ஹோட்டல்கள்

கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளநிலையில் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் ஹோட்டல்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் சுமார் 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக, தொழில்கள் முழுவதும் முடங்கின. அத்தியாவசியத் தேவையைச் சேர்ந்த தொழில்கள் மட்டும் படிப்படியாக பழைய நிலையை நோக்கி திரும்பிய நிலையில், கேளிக்கை, ஆடம்பரம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து சுணக்கம் இருந்தது.

  குறிப்பாக, சுற்றுலா, ஹோட்டல்கள், திரையரங்குகள் போன்றவை பழையை நிலைக்குத் திரும்பாமலேயே இருந்துவந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலைமை ஓரளவுக்கு சுமூகமாகி பழையை நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அந்த நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதனையடுத்து, தமிழ்நாட்டு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கைப் பிறப்பித்தன. தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போதுவரை, ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், ஹோட்டல் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

  அதனால், தமிழ்நாடு முழுவதும் பலரும் ஹோட்டல்களை விற்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கும் கட்டுமானத்துறையினர், ‘சென்னை, கோயம்புத்தூர, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பலபகுதிகளில் நடத்திக்கொண்டிருக்கும் ஹோட்டல்களை விற்பதற்கு பலர் அனுகுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதும் இதே பாதிப்புகள் இருந்தது’ என்று தெரிவிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல, ஹோட்டல்துறையில் இருப்பவர்கள், தமிழகம் முழுவதும் சிறிய, பெரிய என்று சுமார் 2,000 ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கும். கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்று செய்திகள் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், கல்லூரிகள், பள்ளிகள் அருகிலிருந்த ஹோட்டல்கள் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகிலிருந்த கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கின்றனர்.
  Published by:Karthick S
  First published: