திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி கடிதம்

திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி கடிதம்

தமிமுன் அன்சாரி

நாகப்பட்டினம் தொகுதியை வாப்பிருந்தால் ஒதுக்கித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக தலைமையிடம் கொடுத்துள்ளார்.

  தமிழக அரசியல் களம் நாள்தோறும் புதிய பரபரப்புகளை சந்தித்து வருகின்றது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், கூட்டணிகட்சிக்கு அதரவு என பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், திமுகவுக்கு அதரவு தருவதாகத் தொரிவித்தார்.

  இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுகவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு இருக்கும் என்று தரிவித்துள்ளார்.

  Must Read : சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு

   

  மேலும், தங்கள் கட்சிக்கு சென்ற முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகப்பட்டினம் தொகுதியை வாப்பிருந்தால் ஒதுக்கித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக விரும்புவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: