• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குளத்தில் கலக்கும் மனிதக் கழிவுகள்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி

குளத்தில் கலக்கும் மனிதக் கழிவுகள்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி

மாணவி ஆகிலா

மாணவி ஆகிலா

முதல்வரிடம் மனு அளித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்  அதன் அடிப்படையில் முதல் அமைச்சருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக மாணவி ஆகிலா தெரிவித்தார்.

  • Share this:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஹாமீன் புரம் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மனிதக் கழிவுகள் அனைத்தும் ஆங்காங்கே கெட்டி கிடப்பதோடு அது நேரடியாக அருகில் உள்ள குளத்தில் கலக்கிறது. இதனை சரி செய்து தர தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அப்பகுதியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஆகிலா கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஹாமின் புரம் இங்கு ஒன்று முதல் எட்டு தெருக்கள் அமைந்துள்ளது .  திருநெல்வேலி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதி என்ற போதிலும் இங்கு பாதாள சாக்கடை வசதி இல்லை.  வாறுகால் வசதி சரிவர இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே கொட்டிக் கிடக்கிறது.

குறுகலான தெருக்கள், ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளும், கழிவு நீரும்  அருகிலுள்ள கன்னிமார் குளத்தில் நேரடியாக கலக்கிறது. இதனால் அங்கு தேங்கியுள்ள மழைநீர் கழிவு நீராக மாறுவதுடன் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில் ஹாமீன் புரம் 3வது தெருவைச் சேர்ந்த ஷாபி ரகுமத்துல்லா என்பவரின் மகளான ஆகிலா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  சுகாதார சீர்கேட்டால் தங்கள் பகுதி மக்கள் படும் இன்னல்களையும் ஏற்படும் நோய் தொற்று பாதிப்பையும் தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.

கழிவு நீர் கலக்கும் குளத்தின் அருகே சிறுமி ஆகிலா


திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தின்  போது அறிவித்ததுடன், ஒவ்வொரு பகுதியிலும் மனுக்களையும் ஸ்டாலின் பெற்றார். தற்போது முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கென தனி துறை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அதிகாரியாக நெல்லை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளது கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு  நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த நிலையில் முதல்வரிடம் மனு அளித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்  அதன் அடிப்படையில் முதல் அமைச்சருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக மாணவி ஆகிலா தெரிவித்தார். மேலும் தங்கள் பகுதிக்கு பாதாளசாக்கடை திட்டம் வேண்டியும் கோரிக்கை விடுத்தார் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல முறை வலியுறுத்தியும்  மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More:  தந்தையை இழந்த துயரத்திலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய சிறுமி - முதல்வருக்கு உருக்கமான கடிதம்

பொதுவாக சமூக பிரச்சனைகளில் எவரும் ஆர்வம் காட்டாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய தனி ஒரு ஆளாக ஐந்தாம் வகுப்பு மாணவி முன்வந்தது முதல்வருக்கு கடிதம்  எழுதியது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: