நாகையில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: கொலையா? போலீஸ் விசாரணை

நாகை அருகே தூர்ந்துப்போன ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு 9 மாதத்திற்கு முன்பு காணாமல் போன இளைஞர் என அவரின் உறவினர்கள் காவல் துறையிடம் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

நாகையில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: கொலையா? போலீஸ் விசாரணை
நாகையில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
  • Share this:
நாகை அடுத்துள்ள வெங்கிடாங்கால் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தூர்ந்துப்போன கடகடப்பு ஆற்றில் விளையாட சென்றுள்ளனர். அப்போது கருவை முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளனர். எலும்புக்கூடை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நாகூர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருவைக்காட்டில் மனித எலும்புக்கூடு மண்ணில் புதைபட்டும், முட்புதர்களில் சிக்கியும் கிடந்ததை கண்டறிந்தனர்.இதனிடையே கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த 9 மாதத்திற்கு முன்பு காணாமல் போன அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவருடைய  29 வயதுடைய மகன் முரளியாக இருக்கக்கூடும் என உறவினர்கள் காவல் துறையிடம் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க... 

மாநிலங்களவை தேர்தல் வெற்றி நிலவரம்: பாஜக கூட்டணியின் பலம் என்ன?அதனை தொடர்ந்து தடயங்களை சேகரித்த போலிசார், எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். எலும்புக்கூடு காணாமல் போன நபரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளார்களா போன்ற கோணங்களில் நாகை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading