நெல்லையில் அரசு பள்ளியில் மாணவிகளின் ஊக்கத்தொகையில் மோசடி: நடவடிக்கை பாயுமா?

Youtube Video

நெல்லை மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊக்கத்தொகையில் மோசடி நடந்திருப்பது மனித உரிமைகள் ஆனையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.பள்ளி தலைமையாசிரியர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நெல்லையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்ல வேண்டிய ஊக்கத்தொகையில் கையாடல் நடந்திருப்பதை மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது. 

  நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், பெண்கள் மேல்நிலைப் பள்ளி நெல்லை டவுன் பகுதியில் இயங்கி வருகின்றது. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த பள்ளியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொடுக்கும் கல்வி ஊக்கத்தொகையில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

  இதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்த பைரவி மீது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துவளவன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார் . இதை தொடர்ந்து மனித உரிமை ஆணைய அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி, மோசடி நடந்திருப்பதை உறுதி செய்தனர்.

  இதை தொடர்ந்து 25,000 அபராதமும், பள்ளியில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மாவட்டபள்ளிக்கல்வி அதிகாரிகள் முழுமையான விசாரணை செய்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படியும், அதன் அடிப்படையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.

  மேலும் படிக்க...போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாரும் இனி தப்பிக்க முடியாது

  பள்ளி மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய உதவிதொகையில் மோசடி நடந்திருப்பது மனித உரிமை ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் மீது பள்ளிகல்விதுறையின் நடவடிக்கை பாயுமா?

   

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: