விவேக்கின் மரணத்தில் மர்மம் - மனுவை விசாரணைக்கு ஏற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நடிகர் விவேக்

விவேக் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி தொடர்ந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை எடுத்துள்ளது.

 • Share this:
  தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் விவேக். சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தவர். காமெடி கதாபாத்திரம் என்று இல்லாமல் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது மனதையும் கவர்ந்திருந்தார். அவருடைய காமெடியில் அதிக அளவு சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பார். அப்துல் கலாமின் கருத்துகளை தீவிர பின்பற்றி வந்த அவர், அவர் வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து லட்சக்கணக்கான மரங்களை அவருடைய வாழ்நாளில் நட்டுவந்தார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருந்தபோது பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதில் அச்சம் இருந்தது. மக்களுடைய அச்சத்தை போக்கும் வகையில் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஏப்ரல் 15-ம் தேதி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

  ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுதினம் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் உயிரிழந்தார். அவருடைய தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய மறைவு தடுப்பூசி குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியது. விவேக்கின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தது.

  இதுகுறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தடுப்பூசி போட்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
  Published by:Karthick S
  First published: