நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய பணியாளரை மீண்டும் பணியில் சேர்க்கும் விவகாரம் குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வெளிநாடு சென்று வந்ததாக கூறி கடந்த மார்ச் 28 ஆம் தேதி மாநகராட்சி அவரது வீட்டில் தனிமைப்படுத்தும் நோட்டீஸ் ஒட்டியது. தவறுதலாக நோட்டீஸ் ஒட்டிய காரணத்துக்காக நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வினோத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயர் அதிகாரிகள் கூறியதால் தான் நோட்டீஸ் ஒட்டியதாக வினோத்குமார் புகார் தெரிவித்தார்.
பின்னர், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி மாநகராட்சி இணை ஆணையரிடம் முறையிட்ட பின், மே 9 ஆம் தேதி மீண்டும் பணிக்கு சென்ற அவரை அதிகாரிகள் பணி செய்ய அனுமதிக்கவில்லை என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் வினோத் குமார் புகார் அளித்திருந்தார்.
மேலும், தன் குடும்ப சூழலை விளக்கி தனக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், புகார் குறித்து 4 வாரத்தில் விரிவான பதிலளிக்குமாறு மாநகராட்சி ஆணையாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.