மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது எனவே ஆறு மொழிகள் படித்தாக வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல, தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள்.

News18 Tamil
Updated: September 15, 2019, 2:27 PM IST
மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது எனவே ஆறு மொழிகள் படித்தாக வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்
News18 Tamil
Updated: September 15, 2019, 2:27 PM IST
மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது எனவே ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் காந்தியடிகள் 150-ம் ஆண்டு பாதயாத்திரை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘இந்திய திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தேச பிதா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு யாத்திரையை நடத்த திட்டமிட்டுளோம்.

இதை பாஜகவினர் அனைவரும் முன்னெடுத்துச் செல்வார்கள். ஒரு நாளுக்கு 10 கிலோமீட்டர் பயணம் வீதம், 15 நாட்கள் பாதயாத்திரை நடைபெறும்.


மண்ணின் தன்மையைக் காக்கும் சுதேசி பொருளாதாரக் கொள்கை, தீண்டாமை ஒழிப்பு, பெண் உரிமை ஆகியவை இதன் நோக்கமாக அமையும். தீயசக்திக்கு எதிராக, நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்தும், இந்தியத் தன்மை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதற்காக, மேக் இன் இந்தியா திட்டத்தை பரப்பும் நோக்கில் இந்த யாத்திரை நடைபெறும்.

வாரத்தில் ஒரு நாளாவது கதர் ஆடை அனைவரும் அணிய வேண்டும். நீர் மேலாண்மை முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. மழை நீரை சேகரிப்பது ஆகியவை இந்த யாத்திரையின் நோக்கம். காந்தி பிறந்தநாள் அன்று யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் யாத்திரை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக அரசு குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில பாஜக தலைவர் பற்றிய முடிவை தலைமை எடுக்கும். மோடி ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த 100 நாட்களில் ஏற்படுத்தியுள்ளார். உலகில் பழைமையான மொழி தமிழ் என்றும் சமஸ்கிரத்தை விட பழைமையான மொழி தமிழ் என மோடி கூறியுள்ளார்.

Loading...

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல, தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள்.

5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வுகளை பொது தேர்வாக நடத்தினால் என்ன தவறு?

சுபஸ்ரீ இறந்திருப்பது நமகக்கெல்லாம் சாபம். உலக அரங்கில் இந்த நிகழ்வால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எந்த நிகழ்வுகளிலும் பேனர்களை தவிர்க்க வேண்டும்’’.

இந்தி திணிப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என கூறினார்.

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...