தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் மக்கள்: மீண்டும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி விடுமுறை முடிந்து நேற்றிரவு முதல் மக்கள் தங்கள் பணியிடங்களை நோக்கி செல்கின்றனர். இதனால் இன்று சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை முதல் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது.

தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் மக்கள்: மீண்டும் போக்குவரத்து நெரிசல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 8, 2018, 8:03 AM IST
  • Share this:
தீபாவளி விடுமுறை முடிந்து தமிழகத்தின் பிற ஊர்களில் இருந்து சென்னை, கோவை மாநகரங்களுக்கு ஏராளமானோர் பணிக்கு திரும்பியதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாள் விடுமுறைக்காக சென்னையில் இருந்து பேருந்துகள், கார் மற்றும் இருசக்கரவாகனங்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

தீபாவளி விடுமுறை முடிந்து நேற்றிரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட மக்கள் சென்னை நோக்கி புறப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளின் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு திரும்பினர். மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் தடையின்றி பயணித்தனர்.


இதே போல், தீபாவளி விடுமுறை முடிந்து, சென்னை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பணிக்கு திரும்பியதால் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருந்தன.

நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்பியதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூடினர். சென்னைக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அசைய கூட இடம் இல்லாமல் மக்கள் சிரமமடைந்தனர்.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் திண்டிவனம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடிகளில் அதிக வாகனங்கள் வந்து குவிந்தால் கட்டணமில்லாமல் சுங்கச்சாவடியை திறந்துவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading