• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்? - போலீசில் சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம்

மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்? - போலீசில் சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம்

சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா

போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சிவசங்கர் பாபாவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான சுசில் ஹரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவிகள் சிலர் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீஸார் டேராடூன் விரைந்தனர். மருத்துவமனையில் தப்பி ஓடிய பாபா டெல்லியில் உள்ள தனது ஆசரமத்தில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அவரை டெல்லியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகம் அழைத்து வருவதற்காக சாகேத் நீதிமன்றத்தில் டிரான்சிட் ரிமாண்ட் பெற சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் மாலை 3.30 மணிக்கு நீதிபதி விபில் சந்த்வார் முன்பு ஆஜர்படுத்தினர்.இதனையடுத்து விமானம் மூலம் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Also Read: PUBG Madan :'நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா..’ எல்லாமே காதுகொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் - யார் இந்த மதன் ?

    சிவசங்கர் பாபா போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவையணைத்து வீடியோ பதிவாகவும் எடுத்துள்ளனர். விசாரணையில் பள்ளி மாணவிகளுடன் நடனமாடியதை சிவசங்கர் ஒத்துக்கொண்டுள்ளார். குழந்தை வயதுள்ள மாணவிகளை, தான் காமத்தோடு கட்டிப்பிடிக்கவில்லை என்றும், பாசத்தோடும், நட்பு ரீதியாகவும் மட்டுமே கட்டிப்பிடித்து நடனம் ஆடினேன் எனக் கூறியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: