ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்!

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்த்தை திருத்துவதற்கான மசோதாவை இன்று சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு முகாமைகள் மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் சட்டமன்றத்தில்  இன்று தாக்கல் செய்தார்.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, Tamil Nadu Government Jobs, TN Assembly, TNPSC