கோயில்களின் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படும் ஆகமங்கள் தொடர்பான வினா படிவத்திற்கு உரிய விவரங்களை அளிக்குமாறு மண்டல இணை ஆணையர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில்,
1. சைவக் கோயிலா அல்லது வைணவக் கோயிலா ?
2. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது ? வரலாற்றுக்கு முற்பட்டதா ? பிற்பட்டதா ?
3. கோயிலில் கருவறை உட்பட எத்தனை சந்நிதிகள் உள்ளன ? மூலவர் எத்திசை நோக்கி இருக்கிறார் ?
4. கோயில் கட்டுமானம் எந்த ஆகமத்தைச் சேர்ந்தது ? எந்த ஆகமத்தையும் சாராத பக்தி கோயிலா ?
5. கோயில் பூசாரிகள் முறையாக ஆகமப்படி மேற்கொண்டவரா ?
6. கோயில் வடகலையைச் சார்ந்ததா ? தென்கலையைச் சார்ந்ததா ?
ஆகிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
திமுக என்றால் முற்போக்குவாதிகள் நிறைந்த ஓர் அறிவு இயக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
கோயில் கட்டுமானம், வழிபாடுகள், கோயில்களில் மேற்கொள்ளப்படும் பிரதோஷ பூஜைகள் உள்ளிட்ட 50 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த கடிதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், இதுதொடர்பாக குழு அமைக்கப்பட்ட பின், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Minister Sekar Babu