Home /News /tamil-nadu /

விஜய ரகுநாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலம் - நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை சமர்பிப்பு..

விஜய ரகுநாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலம் - நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை சமர்பிப்பு..

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Vijaya Raghunatha Nayakkar: வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், விஜய ரகுநாத நாயக்கர் என்பவரால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி செப்பு பட்டயம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு விஜய ரகுநாத நாயக்கர் தானமாக வழங்கிய 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய  அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், விஜய ரகுநாத நாயக்கர் என்பவரால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை எனும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி செப்பு பட்டயம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது  ஏழு ஏக்கர் மட்டுமே கோவிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோவில் தனி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோவிலில் இருந்து மாயமான  செப்பு பட்டயங்களை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் அதற்காக மாவட்ட நீதிபதியை நியமிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பட்டயத்தில் குறிப்பிட்ட நிலங்கள் 7 கிராமங்களில் பரவியுள்ளதாகவும், 205 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சில நிலங்கள் அரசின் பயன்பாட்டிலும் உள்ளதாகவும்,  மாயமான செப்பு பட்டயம் தற்போது அறநிலையத்துறை பாதுகாப்பில் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் யானை ராஜேந்திரன் ஆஜராகி அறநிலையத்துறை வசம் தற்போது இருக்கும் செப்பு பட்டயம் போலியானது என்றும், அசல் பட்டயம் அறநிலையத்துறையின் ஓய்வுபெற்ற ஆணையர் வீட்டில் இருந்ததாகவும், 1991-2021 வரை எங்கிருந்தது என விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வாதிட்டார். செப்பு பட்டயத்தின் உண்மை தன்மை குறித்த ஆய்வு தொல்லியல்துறை முன்பு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Also read... அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தா தான் சரியா இருக்கும் - கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்றம் அதிரடி

அப்போது நீதிபதிகள், செப்புப் பட்டயம் குறித்த தொல்லியல் துறை அளித்த விளக்கத்தையும், மொழி மாற்றத்தையும் மனுதாருக்கு வழங்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் இறுதி வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Thiruvarur

அடுத்த செய்தி