Home /News /tamil-nadu /

மதுக்கடைகள் திறக்க அனுமதி... விநாயகர் சிலை வைத்து வழிபட தடையா ? - ஹெச். ராஜா

மதுக்கடைகள் திறக்க அனுமதி... விநாயகர் சிலை வைத்து வழிபட தடையா ? - ஹெச். ராஜா

ஹெச். ராஜா

ஹெச். ராஜா

சமூக இடை வெளியின்றி வராத்தில் 6 நாட்கள் மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதி. வருடத்தில் 6 நாட்கள் விநாயகர் சிலை வைத்து வழிபட தடையா ? தமிழக அரசு உடனடியாக முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மதுக்கடைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு எந்தவித சமூக இடைவெளியின்றி மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

    இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ALSO READ :  தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறையும் மாவட்டங்கள் எவை?

    இந்த உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகின்ற செயல். மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசியல் சட்டப்படி அரசுத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அறநிலைத் துறை அதிகாரிகளின் போக்கு அராஜக போக்காக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: HRaja, Vinayagar Chathurthi

    அடுத்த செய்தி