• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமாவளவன் ஒரு சமூகவிரோதி - ஹெச்.ராஜா காட்டம்

திருமாவளவன் ஒரு சமூகவிரோதி - ஹெச்.ராஜா காட்டம்

திருமாவளவன் ஹெச்.ராஜா

திருமாவளவன் ஹெச்.ராஜா

திருமாவளவன் ஒரு சமூக விரோதி என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக்கடைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தங்கியிருந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா, கைதானவர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்தனர். இருப்பினும் மதுபானகடை அகற்றப்படாததால் போராட்டம் நடைபெற்றது.

ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர், நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா? சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் நிறைந்துள்ளது. 1967 க்குப் பின் தான் கருணாநிதி மதுபான கடையை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இந்த மதுபானக்கடைகளால்தான் அவனவனக்கு தனக்கு பிள்ளை பெற்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்றி அவனவன் பொண்டாட்டிக்கு அவனவன் பிள்ளை பெற்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கும் சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு காரணமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதிற்கு, ‘திருமாவளவன் அவரே குழப்பத்தில் தான் இருப்பார். யார் அந்த திருமாளவன் சரக்கு மிடுக்கு பேச்சுகாரர் தானே. திருமாளவன் அவர்  ஒரு சமூக விரோதி’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: