ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என்று கூறுபவர்கள்தான் விஷயம் தெரியாதவர்கள்: ஹெச். ராஜா கருத்து

ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என்று கூறுபவர்கள்தான் விஷயம் தெரியாதவர்கள்: ஹெச். ராஜா கருத்து

ஹெச்.ராஜா.

தமிழக மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்ப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ராமர் கோயில் கட்ட தமிழக மக்கள் அனைவரும் நிதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  அவர் கூறியதாவது:

  கூட்டணி விவகாரத்தில் கட்சியின் தேசியத் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பாஜகவினர் செயல்படுவார்கள். மகாத்மா காந்தியே ராம ராஜ்ஜியம் வேண்டுமென விரும்பினார்,

  தமிழக மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

  இந்தியாவைப் பற்றி ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் எதுவும் தெரியாது.

  ராகுல் காந்தியை விஷயம் தெரிந்தவர் என ஏற்றுக்கொள்பவர்கள்தான் விஷயம் தெரியாதவர்கள்.

  சசிகலா விடுதலையானதை அடுத்து, சுதந்திர பறவையாக மாறிவிட்டதாகவும், இனி அவர் முடிவை அவரே எடுப்பார், என்று தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: