ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சர்ச்சையான ட்விட்டர் பதிவு : ’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ ஹெச்.ராஜா புது விளக்கம்!

சர்ச்சையான ட்விட்டர் பதிவு : ’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ ஹெச்.ராஜா புது விளக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

எச்.ராஜா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறித்து விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ட்விட்டர் பதிவு தொடர்பாக விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்  ஹெச்.ராஜா புது விளக்கம் அளித்துள்ளனர்.

  ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் பதிவில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி வீட்டில் வளர்த்த அல்சேசன் நாய்க்கு வெறிபிடித்ததாகவும், அதனால் நாய் பிடிப்பவரிடம் சொல்லி அதை மூங்கிலால் அடித்தபோது நாய் இறந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜாவின் மேற்கண்ட டுவிட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் செய்திருந்தார்.

  இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

  இதையும் படிங்க: திருக்குறளை முழுமையாக படிங்க” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறளை அனுப்பி வைத்து போராட்டம்!

  இந்த நிலையில் எச்.ராஜா புது விளக்கம் ஒன்றை தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சிலர் வெறி பிடித்தது போல தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு உரைக்க புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக ட்வீட் போட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BJP, HRaja, Twitter