முட்டிமோதிய அதிமுக; கொரோனா இரண்டாம் அலையை திமுக எப்படி எதிர்கொள்ளும்? முன் நிற்கும் சவால்கள் என்ன?

முட்டிமோதிய அதிமுக; கொரோனா இரண்டாம் அலையை திமுக எப்படி எதிர்கொள்ளும்? முன் நிற்கும் சவால்கள் என்ன?

ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிமுக அரசு முட்டி மோதி வந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் நிகழ உள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் 1996-க்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக 118 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 35 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 150 முதல் 160 தொகுதிகள் வரை கைப்பற்றும் என தெரிகிறது.

  அதிமுக 68 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. லும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 150 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் முன்னிலையில் உள்ளது.

  இதனால் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 1996-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

  இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி அமைக்கபோகும் திமுகவுக்கு பெரும் சவாலாக நாட்டையே உலுக்கி வரும் கொரோனா இரண்டாம் அலை இருக்க போகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. 3,689 பேர் இன்றைய தினம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் தினசரி பாதிப்பானது 20ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுபாடுகளை விதித்துள்ளது. அதேபோல், வணிக வளாகங்கள், திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை திறக்க அனுமதியில்லை என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடுகள் மே.31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  மற்றொரு பக்கம், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என அடுக்கடுக்காக பல சவால்கள், புதிதாக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் முன்பு உள்ளன.

  ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், முழு ஊடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது மக்கள் மத்தியில் தொடக்கத்திலே எதிர்மறையான தோற்றத்தை உருவாக்கி விடும். மேலும், மு.க.ஸ்டாலினும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மே.2க்கு பின்னர் முழு ஊரடங்கு இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

  மத்திய அரசும், முழு ஊரடங்கை இறுதிகட்ட ஆயுதமாக மாநிலங்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிமுக அரசு முட்டி மோதி வந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் நிகழ உள்ளது. இதனால், கொரோனா இரண்டாம் அலையை திமுக எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பதை காண மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்திற்கு விடியல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
  Published by:Esakki Raja
  First published: