Exclusive : கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி?

கோடநாடு பங்களாவிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் தான் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் புதிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. சம்பவத்தின் போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்பது தெரியவந்துள்ளது.

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் புதிய தகவல் கிடைத்துள்ளது. விசாரணையின் போது சிசிடிவி கேமரா மற்றும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் முக்கியமான ஒன்று சிசிடிவி கேமரா. இதில் ஆப்ரேட்டராக இருந்தவர் தினேஷ், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவத்தில் அடுத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழும்பியது. அதில் கோடநாடு பங்களாவை பொறுத்தவரை மின்சாரம் என்பது கோத்தகிரியிலிருந்து மண்தரையில் புதைக்கப்பட்டு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து கோடநாடு பங்களாவில் இருக்கும் மின்மாற்றியின் மூலமாக மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

    கோடநாடு பங்களாவிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் தான் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்சாரம் எப்படி துண்டிக்கப்பட்டது என்பது தற்போதைய கேள்வியாக இருந்தது. இது தொடர்பாக மின்சாராவரிய அதிகாரிகள் கூறுகையில் கோடநாடு பங்களாவிற்கு எப்போதும் போது தான் மின்சாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது.



    கோநாடு பங்களாவில் இருக்கும் மின்மாற்றியில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அறிக்கையாக விரைவில் உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் கிடைத்துள்ள புதிய தகவல்களால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: