சர்கார் படத்தில் காட்டப்பட்ட ’49 பி’ பிரிவைப் பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி?

தேர்தல் ஆணையம், இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த, காமெடி நடிகர் யோகி பாபு படத்தையும், அவருடைய வசனத்தையும் பயன்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தில் காட்டப்பட்ட ’49 பி’ பிரிவைப் பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி?
சர்கார் விஜய்
  • News18
  • Last Updated: April 17, 2019, 5:00 PM IST
  • Share this:
உங்கள் வாக்கை வேறு யாரேனும் பதிவு செய்திருந்தால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு உங்கள் வாக்கை பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துவருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளில் வாக்கு இயந்திரத்திங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப் பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், வாக்குப் பதிவு, நோட்டா, 49 பி உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தின் மூலம், ’49 பி’என்ற சட்டவாய்ப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ‘வாக்காளர்களின் வாக்கை யாரேனும் கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தால், நாம் மீண்டும் முறையிட்டு நம் வாக்கை பதிவு செய்துகொள்ளலாம்’ அதற்கான உரிமையை அளிப்பதுதான் ’49 பி’ பிரிவு.

இந்தமுறை, தேர்தல் ஆணையம் ’49 பி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. மேலும், எவ்வாறு, அந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.


தேர்தல் ஆணைய விளக்கத்தின்படி, ‘வாக்காளர்களின் வாக்கை, வேறு யாரேனும் பதிவு செய்திருந்தால், அதனை, தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவருடைய கேள்விகளுக்கு தக்க பதிலளித்து வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும்’ என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம், இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த, காமெடி நடிகர் யோகி பாபு படத்தையும், அவருடைய வசனத்தையும் பயன்படுத்தியுள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்