ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா? - வீட்டில் இருந்தே புகார் அளிக்கலாம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை போன் மூலம் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம்.

 • Share this:
  ரேஷன் அட்டை மூலம் அரசானது ஏழைக் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் சாமானியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

  ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகத் தான் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக ரேஷன் கடைகளில் நடைபெறும் பதுக்கல், ஒதுக்கல் எல்லாம் கொஞ்சம் குறைந்துள்ளது. பல வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கலாம் என்றால் அந்த பொருள் இல்லை இந்தப்பொருள் இல்லை என அழைக்கழிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் ரேஷனில் வாங்கும் பொருள்களின் அளவுகளை குறைத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள்.

  Also Read:  24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

  உதாரணமாக மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டிய கார்டுகளுக்கு சில ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர்தான் ஊற்றுகிறார்கள். ரேஷனில் வாங்கியது ஒரு லிட்டர்தான் எனக் குறுஞ்செய்தி வருகிறது. நமக்கு ஒதுக்கப்பட்ட எண்ணெய் அளவு கூடுதலாக இருப்பினும் நமக்கு கிடைப்பது குறைவாக தானே இருக்கிறது. சர்க்கரை, அரிசி, கோதுமை ஆகியவற்றை நிறுத்து போடும் போது குறையும் அளவுகள் என ரேஷன் கடைகளில் சாமானியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதில் சில்லரை பாக்கிக்காக கட்டாயத்தின் பேரில் திணிக்கப்படும் சோப்பு, தீப்பெட்டிகள் ஏராளம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது புகார் அளிப்பதற்காக ஹெல்ப்லைன் நம்பர்கள் அதாவது இலவச உதவி மைய எண்களை அரசு வழங்கியுள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் ஆன்லைனிலும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். www.tnpds.gov.in என்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

  ரேஷன் கார்டு தொடர்பான புகார்கள்


  புகாரைப் பதிவு செய்ய என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்து உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை பதிவிட வேண்டும். அதற்கு கீழ் உங்கள் மின்னஞ்சல் முகவரி (மெயில் ஐடி) கொடுக்க வேண்டும். வகைப்பாடு என்ற இடத்தில் புகார் தொடர்பானதை தேர்வு செய்ய வேண்டும். பிரச்சனை விவரம் என்ற இடத்தில் 5000 எழுத்துக்களுக்கு மிகாமல் உங்கள் புகார் குறித்து தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் மட்டுமே தங்களது புகாரை அனுப்ப முடியும். கட்டாயம் கைப்பேசி எண்ணை பதிவிட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி மைய எண் 1800 425 5901 தொடர்புக்கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: