ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி?

இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி?

இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி? |

இடி மின்னல் வந்தால் தற்காத்துக்கொள்வது எப்படி? |

மின்னல் மற்றும் இடி புயல் நேரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை வீடியோ வெளியிட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மழை நேரங்களில் நாம் எல்லோரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அதிலும் இடி மற்றும் மின்னல்களும் இருக்கும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய மேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

  இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

  1. இடி, மின்னலின் போது திறந்த வெளியில் இருக்க நேர்ந்தால் இரண்டு காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டு குத்துக்கால் இட்டு அமர வேண்டும். அப்படி அமரும்போது குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

  2. தரைக்கு மிகவும் அருகே அமர்ந்து கொண்டிருப்பது அவசியம். அதன் மூலம் மின்னல் தாக்கும் வாய்ப்பு குறையும்.

  3. காதுகளை இறுக்க மூடிக் கொள்வதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது குறையும்.

  4. குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருந்தால் மின்னல் தரையை தாக்கும் போது ஏற்படும் மின்சாரம் உடலில் பாயாமல் இருக்கும்.

  5. மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிகுறிகள் ஏதுமின்றி மின்னல் தாக்கும்.

  ' isDesktop="true" id="834557" youtubeid="c5wFr2IDTnY" category="tamil-nadu">

  மின்னல் தாக்கும் போது செய்யக்கூடாதவை

  1. இடி, மின்னலின் போது கூட்டமாக சேர்ந்து நிற்க கூடாது.

  2. குடைகளை பயன்படுத்தக் கூடாது.

  3. உயரமான மரங்களைதான் மின்சாரம் தாக்கும். அதனால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

  4. திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்கவும்.

  5. நீரில் இறங்கி நீந்தக் கூடாது. ஏனெனில் மின்னல் நீரை தாக்கினால் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy Rainfall, National Disaster Management, Thunder, Video