தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த தொகுப்பு
1. மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது?
ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அவர்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம்.
2. நான் வாடகை வீட்டில் உள்ளேன், என் ஆதாரை இணைக்க வேண்டுமா?
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.
இதையும் படிக்க : இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு
3. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
ஆதாரை இணைக்க காலகெடு இல்லை. ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறித்தியுள்ளது.
4. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.
5. தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது?
நுகர்வோர் தங்கள் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி
6. ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?
ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, Electricity, Electricity bill, TANGEDCO