தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள் :  வாக்குகள் எண்ணப்படுவது எப்படி?

வாக்கு இயந்திரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதவாகி உள்ளன.

  சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

  தபால் வாக்குகளை பொறுத்தவரை 5,64,253 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இவைகள் எண்ணப்படுவதற்கு 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

  வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும் ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்.  மேஜையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரம் மட்டுமே வைக்கப்படும். பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும். வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டா வாக்குகள் அறிவிக்கப்படும்.

  இதையடுத்து, 14 மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும். வாக்குச் சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும். அதிகபட்சமாக 43 வரை செல்ல வாய்ப்புள்ளது. பிற்பகலுக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். இன்று இரவு 12 மணி வரை வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்புள்ளது.
  Published by:Vijay R
  First published: