ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாவில் சுவை நீங்கா தேங்காய் பால் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

நாவில் சுவை நீங்கா தேங்காய் பால் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

பிரியாணி என்றாலே தானாக மணம் வீசும்

பிரியாணி என்றாலே தானாக மணம் வீசும்

பிரியாணி என்றாலே தானாக மணம் வீசும்

 • 2 minute read
 • Last Updated :

பிரியாணி சுவைக்கு அடிமை ஆகாதவர்களைக் காண்பது அரிது. அதனால்தான் சமீப காலமாக பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் சாப்பிடுவதைக் காட்டிலும் வீட்டில் செய்யும் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. பிரியாணி சுவைகளில் பல வகைகள் உண்டு. அதிலும் தேங்காய் பால் கொண்டு சமைக்கும் பிரியாணிக்கு இருக்கும் சுவை நாவில் எச்சில் ஊற வைக்கும். நீங்களும் சமைத்து அசத்த இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 3 கப்

மட்டன் - அரை கிலோ

தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 15

பெரிய வெங்காயம் - 4

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 25 பற்கள்

பச்சை மிளகாய் - 6

கிராம்பு - 4

பட்டை - 4 துண்டு

ஜாதிக்காய் - பாதி

ஏலக்காய் - 4

மிளகாய் தூள் - 1 1/2 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

கரம் மசாலா - 1/4 tsp

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 tsp

எலுமிச்சைப் பழம் - பாதி

நெய் - அரை கப்

எண்ணெய் - அரை கப்

உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்

தேங்காய் - ஒரு மூடி

முந்திரி - 15

தயிர் - அரை கப்

புதினா - ஒரு கட்டு

மல்லித் தழை - ஒரு கட்டு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கிராம்பு - 3

பட்டை - 3 துண்டு

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இலை - ஒன்று

சோம்பு - 1 tsp

செய்முறை:

 • மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் குக்கரில் மட்டனை போட்டு அதோடு கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
 • அடுத்ததாக மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • மீண்டும் மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, முந்திரி சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • பிறகு , அகலமான பாத்திரத்தில் வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றையும் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
 • அடுத்ததாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
 • வதங்கியதும், மிளகாய் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள பட்டை , கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

 • அந்த கலவையில் எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
 • அடுத்ததாக எடுத்து வைத்துள்ள 4 கப் தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு மட்டன் வேக வைத்த தண்ணீரை இரண்டு கப்புகளாக எடுத்துக் கொண்டு அதையும் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு வேகவைத்த மட்டனையும் சேர்த்துக் கொள்ளவும்.
 • பிறகு, தேவையான அளவு உப்பு, புதினா இலைகள், கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து கலக்கவும்.
 • அந்த கலவை ஒரு கொதி வந்ததும் அரிசியை கழுவிக் கொட்டவும். பிரியாணி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை விதைகளை நீக்கிப் பிழிந்து விடவும்.
 • பின் மீண்டும் தட்டு போட்டு மூடி பிரியாணி உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி விடவும்.
 • சுவையான தேங்காய் பால் பிரியாணி ரெடி.

also watch : குடியாத்தம் பிரியாணி செய்வது எப்படி?

First published: