ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? முழு விவரம்

ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? முழு விவரம்

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை ஆன்லைனில் எளிதாக மாற்றுவது எப்படி என்பதை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக அரசு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து குடும்ப தலைவர் ஆணாக உள்ள ரேஷன் அட்டைகளில் பெண்ணை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/ வெப்சைட்டில், ரேஷன் கார்டில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை ஒப்படைக்க / ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய விண்ணப்பிக்கலாம்.

  டிஜிட்டல் காலக்கட்டத்தில் நம் வீட்டில் இருந்தப்படியே எளிதாக இணையத்தில் ரேஷன் கார்டில் என்ன மாற்றம் வேண்டுமோ அதனை சரிசெய்து கொள்ள முடியும். அந்த வகையில் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை எப்படி மாற்றுவது என்பதை தற்போது பார்க்கலாம்.

  Also Read : ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக இல்லத்தரசிகள் பெயரை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்

  முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் குடும்ப தலைவர் மாற்றம் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

  அதன்பின் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதனை பதிவு செய்தால், உங்கள் பக்கம் login ஆகிவிடும். அதை தொடர்ந்து குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்சன்கள் இருக்கும். அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் யாரை குடும்ப தலைவராக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் குடும்ப தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேரே உள்ள பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.

  Also Read : ரேஷன் கார்டில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!

  இதன் பிறகு நீங்கள் குடும்ப தலைவராக மாற்ற செய்ய விரும்புவரின் அதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒரு சான்றை பதிவேற்ம் செய்ய வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 MB அளவுக்குள் இருக்க வேண்டும். அதையும் புகைப்படம் என்று இருக்கும் பாக்ஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  இவை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களது கோரிக்கை வெற்றிகரகமாக பதிவேற்றம் செய்ததற்கான தகவல் வரும். அதனை நீங்கள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கோரிக்கையின் நிலையை முகப்பு பக்கத்தில் சென்று அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை தேர்வு செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Ration card, Ration Shop