நூற்றாண்டு விழா காணும் தமிழக சட்டமன்றம் - சுதந்திரத்திற்கு முன்னர் எப்படி செயல்பட்டது

தலைமை செயலகம்

ஆட்சிப் பொறுப்பிலிருந்த நீதிக் கட்சி கல்வி மற்றும் சமய விவகாரங்களில் வலுவான கொள்கைகளை வகுத்து கட்டமைத்தது.

 • Share this:
  இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் படத்திறப்பு விழா நடைபெற இருக்கிறது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளும் விழவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

  இன்று மாலை 5 மணியளவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்வை ஒட்டி சட்டமன்ற வாளகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  தமிழக சட்டமன்ற பொன்விழா, சட்டமன்ற பவள விழா மற்றும் சட்டமன்ற வைர விழா ஆகியவை திமுக ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்டன. அந்த வகையில், நூற்றாண்டு விழாவையும் திமுக கொண்டாடுகிறது.

  இந்நிலையில், சுதந்திரத்திற்கு முன்னர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த சட்டமன்றம் குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

  1921ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களில் புதிய சட்டமன்றங்கள் தனித் தனியாக உருவாக்கப்பட்டன. அதுவரையில், மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்களின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படாமல் வணிகர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

  1921ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு, சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் நடைபெற்றது.

  1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தது. ஒரு பகுதி அமைச்சரவையிடமும் மற்றொரு பகுதி, ஆளுநர் தலைமையிலான நிர்வாக அவையிடம் இருந்தன.

  1921-ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே இருந்தன. முன்னதாக, 9 மாகாணங்களில் ஆட்சி நிர்வாகத்தின் தலைவராக ஆளுநர் இருந்தார். எனினும் சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கி இருந்தது.

  Read More : தமிழக சட்டப்பேரவையில் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள் 

  1935ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக சென்னை உள்ளிட்ட 9 மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்டது. 1921ஆம் சட்டமன்றமும், 1937ஆம் ஆண்டு சட்டப்பேரவையும் உருவாக்கப்பட்டன.

  அதன்படி, 1937ஆம் ஆண்டு முதால் மாகாண சுயாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி, இந்திய அரசு சட்டம் 1935ன் படி, 216 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமும், 56 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையும் உருவாக்கப்பட்டன.

  Must Read : இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதி படம் திறப்பு

  இந்த சட்டத்தின் அடிப்படையில், நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பின்னர், 1937ஆம் ஜூலை மாதம் முதல் சட்டப்பேரவை பதவியேற்றது. அதனை அடுத்து, இரண்டாம் உலகப்போரில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து, 1939ல் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது. அதைத் தொடர்ந்து, 1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  1909ஆம் ஆண்டு இந்திய அரசியலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பிராமணர் அல்லாத உயர்சாதிகளுக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

  1921 காலகட்டத்தில் இருந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த நீதிக் கட்சி கல்வி மற்றும் சமய விவகாரங்களில் வலுவான கொள்கைகளை வகுத்து கட்டமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: