Home /News /tamil-nadu /

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு திட்டங்கள் குறித்த ஒரு வரலாற்று பார்வை

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு திட்டங்கள் குறித்த ஒரு வரலாற்று பார்வை

அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள்

பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து உயர்கல்வி சேருகின்ற எண்ணிக்கையில் தேசிய சராசரியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெற்று  தமிழகம் முன்னிலை வகிக்கின்றது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பள்ளி மாணவர்களின் பசிபோக்கும் தமிழக அரசின் உணவுத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகின்றது.  அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சர் பி.டி தியாகராயர் துவக்கி வைத்தார். அதனையடுத்து, ​காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1962ம் ஆண்டு  மதிய உணவுத்  திட்டம் தொடங்கப்பட்டது.  1982ல் எம்.ஜி ஆர் ஆட்சிகாலத்தில் சத்துணவு திட்டமாக மாறியது

அதையடுத்து 1989ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிகாலத்தில்  மாணவர்களுக்கு சத்துணவோடு முட்டை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகள்  மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை மெருகேற்றி  வந்துள்ளனர் .

அந்த வகையில் கடந்த 2014 ம் ஆண்டு வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பலவகை கலவை சாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  வெஜ்பிரியாணி, தக்காளி சாதம், கறிவேப்பிலை சாதம்  என  பலவகை கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்க:  அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

அந்த வகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 557 கிலோ கலோரிகளும் 18.92கிராம் புரதமும், 6முதல் 10ம் வகுப்பு வரை 735கலோரிகளும் 22.77கிராம் புரதமும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சத்துணவு திட்டத்தின் கீழ் 46 லட்சத்து 66 ஆயிரத்து 961 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

காலை சிற்றுண்டி திட்டம்:  

தற்போது 1 முதல் 5ம் வகுப்பு குழந்தைகளுக்கு காலை  சிற்றுண்டி வழங்கும் திட்டமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
அந்த வகையில் கேசரி,உப்புமா, வெண்பொங்கல், கிச்சடி
முதற்கட்டமாக 1545 தொடக்கப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகள் காலை சிற்றுண்டி திட்டத்தின் வாயிலாக பயன்பட இருக்கின்றனர். இத்திட்டத்தின் வாயிலாக 150 முதல் 200 கிராம் உணவும் 60 காய்கறிகளும் மாணவர்களுக்கு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது

சர் பிடி தியாகராயர் ,காமராஜர் முதல் மாணவர்களின் கல்விக்கு உணவு மிக முக்கியம் என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்த தொடங்கி அது விரிவடைந்து இன்று மாணவர்கள் படிக்க வந்தால் மட்டும் போதும் உணவு தொடங்கி பாட புத்தகங்கள்  சீருடை என அனைத்துமே அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தமிழகத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து உயர்கல்வி சேருகின்ற எண்ணிக்கையில் தேசிய சராசரியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெற்று  தமிழகம் முன்னிலை வகிக்கின்றது.

இதையும் வாசிக்க: நூற்றாண்டு காணும் சத்துணவுத் திட்டம்: ஒரு பார்வை

தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டமும் நீண்ட காலம் மாணவர்களுக்கு பயனளிக்கும் திட்டமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
Published by:Salanraj R
First published:

Tags: Children education, CM MK Stalin, MK Stalin, Tamil Nadu

அடுத்த செய்தி