• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிறப்பு சான்றிதழ் இருக்கு... குழந்தை இல்லை... விற்பனை நடந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்

பிறப்பு சான்றிதழ் இருக்கு... குழந்தை இல்லை... விற்பனை நடந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கன்னியாகுமரி தொடங்கி, பெங்களூருவரை இந்த கும்பல் செயல்பட்டது எப்படி?

  • Last Updated :
  • Share this:
நாமக்கல் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. அழகான ஆண் குழந்தைக்கு ஒரு விலை, பெண் குழந்தைகளுக்கு ஒரு விலை என மிக சாதாரணமாக குழந்தை விற்பனை செய்த கும்பல் சிக்கியுள்ளது.

ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா தான் அக்கும்பலின் தலைவியாக செயல்பட்டுள்ளார். அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட 10 சிறப்புக் குழு, நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணையை தொடங்கியுள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 சிறப்பு குழு ஆய்வு:

மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு கொல்லிமலையில் ஆய்வு செய்தது. அப்போது, பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில், 20 குழந்தைகள் பெற்றோரிடம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து யார் யாரிடம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்தும், குழந்தைகள் சட்ட ரீதியாக தத்துக் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டதாக, ஈரோட்டைச் சேர்ந்த கருமுட்டை ஏஜென்ட் பர்வீனா பானு, இடைத்தரகர்கள் அருள்சாமி, நிஷா ஆகிய மூவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தினர். பலமணி நேர விசாரணைக்கு பிறகு அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தவிர, துப்புரவு பணியாளர்களான குமாரபாளையம் ஜெயராஜ், திருச்செங்கோடு பாண்டியன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், குமாரபாளையம் பாலாமணி, ராசிபுரம் செல்வி, தமிழ்செல்வி, கோமதி என ஒட்டுமொத்தமாக 10 பேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கருதரிக்க வாய்ப்பில்லாத தம்பதிகளை பர்வீனா பானு வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மூலம் விலைக்கு வாங்கிய குழந்தைகளை வீட்டில் வைத்து பேணியுள்ளார் அமுதா.

நல்ல விலைக்கு தம்பதியினர் வாங்க முன்வந்தால், முருகேசனும், ரவிச்சந்திரனும், அமுதாவும் சேர்ந்து குழந்தையை எடுத்துச்செல்வார்கள். இந்தக்கும்பல் இதுவரை 11 குழந்தைகளை விற்பனை செய்தது உறுதியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மட்டுமின்றி, இக்கும்பல் கன்னியாகுமரி தொடங்கி பெங்களூரு வரை குழந்தைகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆடியோவில் அமுதா சொன்னபடி, கடந்த 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகத்தான் விற்பனை நடந்துள்ளது என்கிறார் விசாரணை அதிகாரி.

குழந்தை கடத்தல் புகார்:

இதனிடையே, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்த ராஜகுமாரி, ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2013ம் ஆண்டு தனக்கு பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டதாகவும், அதில் செவிலியர் அமுதாவுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.

கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு என விசாரணை விரிவடைவதால், இன்னும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: