தமிழ்நாட்டில் தடுப்பூசி இவ்வளவு தான் இருக்கு!

கொரோனா தடுப்பூசி

தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே மாநிலம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  • Share this:
    தமிழகத்தில் மொத்தம் 4,94,496 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது.  முதற்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அண்மையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

    தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே மாநிலம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 4,94,496 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், அதில் 18 வயது முதல் 44 வயதினருக்கு 2,69,885 தடுப்பூசிகளும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு 2,24,611 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுவரை 18-44 வயதினருக்கு 13,10,720 லட்சம் தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 83,08,120 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்திற்காக பெறப்பட்ட நிலையில், 4,94,496 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் அடுத்த 2 தினங்களுக்கு பிறகு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்படலாம் என்றும், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தட்டுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    Read More:   ஆம்புலன்ஸ் மறுப்பு: மருத்துவமனையிலிருந்து நடந்தே வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்!

    தமிழகம் முழுவதும் நேற்று மிக குறைவான அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    18-44 வயதினருக்கு 28,672 ஆயிரம் தடுப்பூசிகளும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு 25,264 ஆயிரம் தடுப்பூசிகள் என மொத்தமாக 53,936 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

    Read More:   பரபரப்பை ஏற்படுத்திய அதிசய மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி!

    அதேபோல், நேற்று முன் தினம் 18-44 வயதினருக்கு 2,01,212 லட்சம் தடுப்பூசிகளும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு 65,214 ஆயிரம் தடுப்பூசிகள் என மொத்தமாக 2,66,426 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published: