Home /News /tamil-nadu /

ஆவின் தயிர், மோர், நெய் விலை எவ்வளவு உயர்வு? - விலை பட்டியல் விவரம்

ஆவின் தயிர், மோர், நெய் விலை எவ்வளவு உயர்வு? - விலை பட்டியல் விவரம்

ஆவின் பொருட்கள் விலை உயர்வு

ஆவின் பொருட்கள் விலை உயர்வு

Aavin : தமிழ்நாட்டில் ஆவின் தயிர், மோர், நெய் போன்றவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. அதன் விலை குறித்த முழு நிலவரம்.

    தயிருக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர், மோர், நெய் போன்றவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.

    அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிருக்கு 5% வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக, விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ஆவின் தயிர் விலை 100 கிராமிற்கு 2 ரூபாயும் , ஒரு கிலோ 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட் லஸ்சியின் விலை உயர்த்தப்படவில்லை. புரோபயோடிக், மேங்கோ, சாக்கோ ஆகிய லசிக்களின் விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மோரின் விலை ஒரு ரூபாயில் இருந்து 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    நெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 45 முதல் 55 வரை உயர்ந்துள்ளது. அரை லிட்டர் நெய்யின் விலை ரூ. 10 முதல் 25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 15 கிலோ நெய் 1000ம் ரூபாய் அதிகரித்துள்ளது. 15 மில்லி பவுச் விலை 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை.

    இந்த விலைஉயர்வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதால், உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயிருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், 20 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நெய்க்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாத நிலையில், விலைஉயர்வு ஏன் என்றும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆவின் தயிர் விலை பட்டியல் விவரம் :













































    தயிர் விலைஎடைமுந்தைய விலைதற்போதைய  விலை
    தயிர் spl100 மிரூ.10ரூ.12
    தயிர் special200 மிரூ.25ரூ.28
    பாக்கெட் தயிர்500 மிரூ.30ரூ.35
    பாக்கெட் sachet200 மிரூ.15ரூ.18
    பிரிமியம் கப் தயிர்400 மிரூ.40ரூ.50
    பிரிமியம் தயிர்1 கிலோரூ.100ரூ.120

    ஆவின் லசி விலை பட்டியல்:



























    லசி எடைமுந்தைய விலைதற்போதைய விலை
    புரோபயோடிக் லசி200 மிரூ.27ரூ.18
    மேங்கோ லசி200 மிரூ.23ரூ.25
    சாக்கோ லசி200 மிரூ.23ரூ.25

    ஆவின் மோர் விலை பட்டியல்:



























    மோர்எடைமுந்தைய விலைதற்போதைய விலை
    இம்யூனிட்டி மோர்200மிரூ.15ரூ.18
    பாட்டில் மோர்200மிரூ.10ரூ.12
    பாக்கெட் மோர்200மிரூ.07ரூ.08

    ஆவின் நெய் விலை நிவரம்:































































    நெய்எடைமுந்தைய விலைதற்போதைய விலை
    நெய்1 லிரூ.535ரூ.580
    நெய்500 மிரூ.275ரூ.290
    நெய்200 மிரூ.120ரூ.130
    நெய்100 மிரூ.65ரூ.70
    நெய்5 லிரூ.2650ரூ.2900
    நெய்(டின்)15 கிலோரூ.8680ரூ.9680
    நெய்(carton)1ரூ.530ரூ.575
    நெய்(carton)500மிரூ.270ரூ.280
    பிரிமியன் நெய் டின்1 லிரூ.585ரூ.630




























    பிரிமியன் நெட் டின் 500 மி ரூ.320ரூ.340
     நெய் பவுச் 100 மி ரூ.60 ரூ.65
     நெய் பவுச் 15மி ரூ.10 ரூ.12
     நெய் SPOUT 500மி ரூ.265 ரூ.285

     
    Published by:Suresh V
    First published:

    Tags: Aavin, Curd, Ghee

    அடுத்த செய்தி