தமிழகத்திற்கு வழங்கப்பட்டதை விட அதிக தடுப்பூசி செலுத்தல்: சாத்தியமானது எப்படி?

கோப்புப் படம்

கடைசி டோஸ் மருந்தை எடுக்கும்போது  அது முழுமையாக வராமல் இருக்கக் கூடும். சிரஞ்சுகளில் சில துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே தயாரிப்பு நிறுவனங்களே பாட்டில்களில் கூடுதலாக நிரப்பி அனுப்புவார்கள். தமிழ்நாட்டில் இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

  • Share this:
தமிழகத்திற்கு வழங்கப்பட்டதை விட அதிக அளவில் பொதுமக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

மத்திய அரசு தொகுப்பு மற்றும் மாநில நேரடி கொள்முதல் ஆகியவற்றின் மூலம் இது வரை 1,57,56,650 டோஸ்கள்  தமிழகத்துக்கு கிடைத்துள்ளன. ஆனால் இது வரை 1,59,30,132 டோஸ் செலுத்தப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்றதை விட கூடுதலாக சுமார் 2 லட்சம் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது அறிவியல்பூர்வமாக சாத்தியம் தான் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறுகிறார்.

‘ஒருவருக்கு 0.5 மில்லி லிட்டர் தடுப்பூசி செலுத்தப்படும். 10 டோஸ் கொண்ட பாட்டிலில்  5 மில்லி லிட்டர் தடுப்பூசி அல்லாமல் கூடுதலாக ஒரு மில்லி லிட்டர் இருக்கக் கூடும். பொதுவாக 16% முதல் 24% அதிகம் இருக்கலாம். எவ்வளவு அதிகம் இருக்கும் என்பது தயாரிப்பு நிறுவனத்தை பொருத்தது’ என்று கூறும் அவர்,  கடைசி டோஸ் மருந்தை எடுக்கும்போது  அது முழுமையாக வராமல் இருக்கக் கூடும். சிரஞ்சுகளில் சில துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே தயாரிப்பு நிறுவனங்களே கூடுதலாக நிரப்பி அனுப்புவார்கள் என்று விளக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன், கால்நடை துறைக்கு இணையமைச்சரானார் எல்.முருகன்!


தமிழ்நாட்டில் இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என்று கூறும் அவர்,  ‘எந்தவித வீணடிப்பும் இல்லாமல் அந்த பாட்டிலில் உள்ள தடுப்பு மருந்தை முழுவதும் பயன்படுத்துகிறோம். கூடுதலாக இருக்கும் ஒரு மில்லி லிட்டரையும் லாவகமாக எடுக்க  பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
மேலும் சிரஞ்சுகளில் துளிகள் ஒட்டிக் கொள்ளா வண்ணம் ஊசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தடுப்பூசி செலுத்த என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே சிரஞ்சுகளில் உள்ள ' dead space' குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களினால் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றதை விட அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்துள்ளது’ என்று தெரிவித்தர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் தினசரி பாதிப்பு 3,500க்கும் கீழ் குறைந்தது...


தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில்,  அடுத்த தடுப்பூசி தொகுப்பு 11ம் தேதி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
Published by:Murugesh M
First published: