தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

மாதிரி படம்

தமிழகம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 12,91,132 பேர் உள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 80 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று, தாபல் வாக்கு செலுத்த விருப்பமெனில் 12டி படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்படும். அவ்வாறு 12டி படிவம் பெறப்பட்டவர்களால் நேடியாக சென்று வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மாவட்ட வாரியான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 12,91, 132 பேர் உள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 பேர் உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கோவை 64,755 பேரும், சேலத்தில் 61 ,728 பேரும், திருப்பூரில் 61,272 பேரும் உள்ளனர். குறைபட்சமாக நீலகிரியில் 8,253 பேரும், பெரம்பலூரில் 11 ,295 பேரும், அரியலூரில் 11 ,390 பேரும் உள்ளனர்.80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியல்
Published by:Vijay R
First published: