Tamil nadu election results 2021 : தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகள்... எப்படி நடைபெறுகிறது?

Tamil nadu election results 2021 : தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகள்... எப்படி நடைபெறுகிறது?

வாக்குப் பதிவு இயந்திரம்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்லலாம். இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

  • Share this:
    தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த முறை திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்லிவரும் நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.

    வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ண 739 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும்.

    ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு கூண்டு அமைக்கப்பட்டு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் உள்ளார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேஜையில் குறிப்பிட்ட சட்டசமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்பட்டு, பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருப்பதை, தேர்தல் நடத்தும் அலுவலர் முகவர்களுக்கு காண்பித்து பின்னர் எண்ணப்படும்.

    ஒவ்வொரு இயந்திரத்தின் பட்டனை அழுத்தியதும் வாக்குச்சாவடி விவரம், வேட்பாளர் விவரம், பதிவான மொத்த வாக்குகள், வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும். வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டாவில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்படும்.

    இதையடுத்து இயந்திரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும். இந்த நடைமுறை 14 மேஜைகளிலும் முடிந்த பிறகு ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததாக கணக்கிடப்படும். இதையடுத்து 14 மேஜைகளிலும் அடுத்தடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும்.

    Must Read : Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும்

     

    வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ் வழங்குவார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைமுறை முடிவுக்கு வரும்.
    Published by:Suresh V
    First published: