தமிழகத்தில் தபால் வாக்கு அளிக்க எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? - தேர்தல் ஆணையர் விளக்கம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்துள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 80 வயதுக்கு அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வாக்குகளை தபால் வாக்கு முறையில் பதிவிடலாம் என்று என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 12-ஆம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது வரை தபால் வாக்குகளுக்காக 2,04,922 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதில் 2,770 காவலர்களும், 33,189 தேர்தல் பணியாளர்களும் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். மேலும் 49,114 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கு அதிகமான 1,59,849 பேரும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக் கூடிய 35 பேரும் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக பதிவு செய்ய விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் வழங்கவில்லை எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: