• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உள்ளது? தமிழகத்தில் 3வது கட்ட ஆய்வு தொடக்கம்!

கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உள்ளது? தமிழகத்தில் 3வது கட்ட ஆய்வு தொடக்கம்!

முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உள்ளது என கண்டறியும் மூன்றாவது கட்ட ஆய்வு தமிழகத்தில் துவங்கியது.

    46 சுகாதார மாவட்டங்களில் 888 நோய் பாதிப்பு இடங்களில் இந்த ஆய்வை சுகாதாரத்துறை நடத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் 30 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்படும்.

    முதல் கட்ட ஆய்வில் 31% பேருக்கும் இரண்டாம் கட்ட ஆய்வில் 23% பேருக்கும் எதிர்ப்பு சக்தி இருந்தது. கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு (SERO SURVEY) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டு அண்மையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 765 இடங்களில் 22,905 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் 5,316 பேர் அதாவது 23 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49% பேருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.

    முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 49% ஆகவும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13% ஆகவும் இருந்தது.

    Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

    அந்த வகையில் தற்போது தினசரி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, உருமாறிய கொரனோ வைரஸ் பாதிப்புகள் ஆகியவை கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 3வது கட்ட SERO சர்வேயில் கொரோனோ தடுப்பூசி நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததா, உருமாறிய வகை வைரஸ் பாதிப்புகள் தாக்கம் குறித்து கண்டறிய நேற்று முதல் சுகாதாரத் துறையின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: